ஏழாலை புளியடி வைரவர் அலங்கார உற்சவம் ஆரம்பம்

ஏழாலை வடக்குப் புளியடி வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவம் நாளை வெள்ளிக்கிழமை (16.05.2025) காலை-09.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. 

தொடர்ந்தும் பதினொரு தினங்கள் இவ் ஆலய அலங்கார உற்சவம் இடம்பெறும். அலங்கார உற்சவ காலப் பகுதியில் தினமும் காலை-09.30 மணியளவில் அபிஷேகம் ஆரம்பமாகி இரவு-10.30 மணியளவில் பூசை இடம்பெறும். முற்பகல்-11 மணியளவில் வசந்தமண்டபப் பூசை ஆரம்பமாகிச் சுவாமி வீதி உலா வந்து மகேஸ்வர பூசையுடன் (அன்னதானம்) நிறைவுபெறுமென ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.