வடக்கு மாகாணத்துக்குப் புதிய பிரதம செயலாளர்!

வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக அரசாங்க சேவை ஆணைக் குழுவின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வந்த திருமதி. தனுஜா முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணப் பிரதம செயலாளராகப் பணியாற்றிய இலட்சுமணன் இளங்கோவன் கடந்த- 06 ஆம் திகதி ஓய்வுபெற்றிருந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று செவ்வாய்க்கிழமை (20.05.2025) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.