செயற்திறன் அரங்க இயக்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் படைப்பாற்றலுக்கும், ஆளுமை விருத்திக்குமான களமாக சிறுவர் மகிழ்களம் மற்றும் சிறுவர் நாடக இரவு இன்று சனிக்கிழமை (24.05.2025) மாலை-05 மணி முதல் இரவு-08 மணி வரை நல்லூர் முதலாவது குறுக்கு வீதியில் அமைந்துள்ள செயற்திறன் அரங்க இயக்க அரங்கில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் சிறுவர்கள் கலந்து கொண்டு ஆடலாம், பாடலாம், விளையாடலாம், கதை கேட்கலாம், சுவரில் வரையலாம், நாடகம் பார்க்கலாம் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
.png)
