புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைப் படுகொலையின் பத்தாவது ஆண்டை நினைவு கூர்ந்து தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (13.05.2025) காலை-09 மணியளவில் யாழ்.நகரில் அமைந்துள்ள பிரதான பேருந்துத் தரிப்பிட நிலையத்திலும், முற்பகல்-11 மணியளவில் வேலணைச் சந்தியிலும் இடம்பெறவுள்ளது.
இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் இணைந்து கொண்டு கண்டனத்தை வெளிப்படுத்துமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.