செலவுகளைப் பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு யோசனையொன்றை அனுப்பி வைத்துள்ளது.
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஜூன் முதல் வாரத்தில் குறித்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்குமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.