புன்னாலைக்கட்டுவன் வடக்கு பூரண புஸ்கலை சமேத ஹரிகரபுத்திர (ஐயனார்) ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று சனிக்கிழமை (17.05.2025) மாலை-05.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்தும் 11 தினங்கள் இவ் ஆலய அலங்கார உற்சவம் இடம்பெறும். 11 தினங்களும் தினமும் மாலை-05.30 மணியளவில் அபிஷேகம் ஆரம்பமாகித் தொடர்ந்து விசேட பூசையும், சுவாமி வீதி உலா வரும் திருக் காட்சியும் இடம்பெறும். எதிர்வரும்-28 ஆம் திகதி புதன்கிழமை மகா கும்பாபிஷேக தினத்தன்று காலை-07 மணியளவில் சங்காபிஷேகம் ஆரம்பமாகி இடம்பெறும். மதியம் மகேஸ்வர பூசை (அன்னதானம்) நடைபெறும்.
அன்றைய தினம் மாலை-05 மணியளவில் திருக்கல்யாணம், திருவூஞ்சல் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா வரும் திருக்காட்சி இடம்பெறும். மறுநாள்- 29 ஆம் திகதி வியாழக்கிழமை வைரவர் பொங்கல் இடம்பெறுமென தேவஸ்தானத்தினர் தெரிவித்துள்ளனர்.