எதிர்வரும்-16 ஆம் திகதி திங்கட்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்குப் பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
நண்பகல் வரை மிகவும் வெப்பமான வானிலை நிலவும். எனினும், பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை (10.06.2025) அதிகாலை யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.