ரணிலுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நாளை புதன்கிழமை (10.06.2025)  முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மருந்து இறக்குமதி தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டுக்கு மருந்துகள் இறக்குமதி செய்தமை தொடர்பில் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்னதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்திருந்தார். முன்னைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் ஏற்கனவே குறித்த முறைப்பாடு தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தங்களது வாக்குமூலங்களை வழங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.