மூத்த பெண் எழுத்தாளுமைகளில் ஒருவரான குந்தவையால் (இராசரத்தினம் சடாச்சரதேவி) எழுதப்பட்ட அனைத்துக் கதைகளையும் உள்ளடக்கி 'காலச்சுவடு - தமிழியல்' வெளியீடாக வெளிவந்துள்ள 'குந்தவை கதைகள்' எனும் நூலின் வெளியீட்டு விழா 'மீளுகை 2' இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (10.06.2025) பிற்பகல்-03.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் எழுத்தாளர் உடுவில் அரவிந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் மூத்த எழுத்தாளர் அ.யேசுராசா நூல் வெளியீட்டுரையை ஆற்றுவார். எழுத்தாளர்களான இ.இராஜேஸ்கண்ணன், சி.ரமேஷ், ஸ்ரீலேக்கா பேரின்பகுமார் ஆகியோர் உரைகள் நிகழ்த்துவர்.