சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைகாசிப் பெருவிழா

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் வைகாசிப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (10.06.2025) சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

காலை-06 மணி முதல் திருவாசக முற்றோதல் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து காலை-07 மணியளவில் விசேட நிகழ்வுகளாக உளவளத் துணையாளர் நா.நவராஜ்ஜின் சிறப்புச் சொற்பொழிவும், 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை வெளிவந்த ஞானச்சுடர் மலரில் ஆக்கங்களை எழுதிய கட்டுரையாளர்கள் அனைவரையும் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெறும்.