வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய 2025 விசுவாவசு வருட மஹோற்சவப் பெருவிழா நேற்று முன்தினம் புதன்கிழமை (26.06.2025) நண்பகல்-12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்ற உற்சவத்தில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்தும் பதினைந்து தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெறவுள்ளது.
இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் அடுத்த மாதம்-05 ஆம் திகதி சனிக்கிழமை இரவு திருமஞ்சத் திருவிழாவும், அடுத்த மாதம்-08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும், 09 ஆம் திகதி புதன்கிழமை காலை தேர்த் திருவிழாவும், 10 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு கொடியிறக்க உற்சவமும், மறுநாள்-11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தெப்போற்சவமும் இடம்பெறுமென ஆலய அறங்காவலர் சபையினர் தெரிவித்துள்ளனர்.