அனைத்துப் பேருந்து சாரதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை போக்குவரத்துச் சபை உட்பட அனைத்துப் பயணிகள் பேருந்துகளின் சாரதிகளும் எதிர்வரும் ஜூலை மாதம்-01 ஆம் திகதி முதல் ஆசனப் பட்டிகள் அணிவதைக் கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச்  சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார். 

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீதிப் பாதுகாப்பில் சர்வதேச தரத்தைப் பேணுவதற்கான முயற்சியில் இது முக்கியமானது எனவும் அவர் கூறினார்.