யாழ். பொன்னாலைக் காட்டுப் பகுதியூடாகப் பெருமளவு கஞ்சா கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி இன்று சனிக்கிழமை (14.06.2025) மதியம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது 240 கிலோக் கிராம் கஞ்சாவுடன் மாதகலைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அவர்கள் மேற்கொண்ட விசேட கண்காணிப்பின் போதே இந்தக் கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட கஞ்சா வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.