ஜீன் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணம் குறைப்பு!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணம் 2.5 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும் ஆரம்ப கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், பஸ் கட்டணக் குறைப்புக்குப் பஸ் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.