யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு நூல் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் ஏற்பாட்டில் எழுத்தாளரும், கட்டடக் கலைஞருமான இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் எழுதிய யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948 ) எனும் நூலின் வெளியீட்டு விழா நாளை புதன்கிழமை (04.06.2025) மாலை-03 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர்.சிவசுப்பிரமணியம் ரகுராம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா நூலின் அறிமுக உரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் தா.சனாதனன், படைப்பாளியும், அரசியல்-சமூக விமர்சகருமான ம.நிலாந்தன் ஆகியோர் நூலின் மதிப்பீட்டுரைகளையும் ஆற்றுவர். இறுதியாக நூலாசிரியர் ஏற்புரை ஆற்றுவார். 

இதேவேளை, இந்  நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை அழைப்பு விடுத்துள்ளது.