கற்றல் நடவடிக்கைகளிலிருந்து கடந்த மூன்று வருடங்களில் 20 ஆயிரம் மாணவர்கள் இடைவிலகியுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி. ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு யோசனைகள் தொடர்பாக மாகாண, வலயக் கல்வி அதிகாரிகளைத் தௌிவுபடுத்தும் வடமேல் மாகாணத்திற்கான கலந்துரையாடல் குருநாகல் மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (30.07.2025) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்தில் தரம் ஒன்றுக்கும், தரம்-06 இற்கும் புதிய பாடவிதானங்களை அறிமுகப்படுத்துவதாகவும், இதன் மூலம் புதிய இலக்குகளை அடைய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.