சந்நிதியான் ஆச்சிரமத்தில் குருபூசை

ஶ்ரீமத் முத்துக்குமாரு மயில்வாகனம் சுவாமிகளின் 40 ஆவது ஆண்டு குருபூசை நிகழ்வானது இன்று வியாழக்கிழமை (31.07.2025) காலை சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து “குருவாய் வருவாய்” எனும்  தலைப்பில் ஆசிரியர் துரை கணேசமூர்த்தி சிறப்புரை ஆற்றுவார்.