லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாதெனவும், தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயுக் கொள்கலன்கள் விற்பனை செய்யப்படும் எனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, 12.5 கிலோக் கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 3690 ரூபாவுக்கும், 5 கிலோக் கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 1482 ரூபாவுக்கும், 2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 694 ரூபாவுக்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுமெனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.