வெளியாகியது சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெள்ளிக்கிழமை  (11.07.2025) வெளியாகியுள்ளன. 

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளங்களான https://www.doenets.lk/ மற்றும் http://www.results.exams.gov.lk/ ஆகியவற்றுக்குள் பிரவேசித்துப்  பரீட்சை முடிவுகளைப் பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான 2024 கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி 13,392 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

மேற்படி பரீட்சையில் 237,026 மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.