கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கவின் கலை மன்றம் முன்னெடுக்கும் ஆடிப் பிறப்பு விழா இன்று புதன்கிழமை (16.07.2025) காலை-08.30 மணி முதல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் சிறப்பாக நடைபெறும்.
மேற்படி விழாவில் கலைக் கோயில் நாட்டியப் பள்ளியின் இயக்குனரும், கலாசாலையின் பழைய மாணவியுமான கலாபூஷணம் பத்மினி செல்வேந்திரகுமார் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார். தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடப் பத்திராதிபர் ஜீவா சஜீவன் அதிதிப் பேச்சாளராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார்.