இணுவிலில் ஆடிமாத இசை வேள்வி

இணுவில் அறிவாலயம் நடாத்தும் ஆடி மாத இசைவேள்வி நாளை சனிக்கிழமை (19.07.2025) மாலை- 05 மணியளவில் இணுவில் அறிவாலய மண்டபத்தில் அறிவாலயத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இந் நிகழ்வில் பஷன் ஹவுஸ் நிறுவன உரிமையாளர் த.கந்தசாமி பிரதம விருந்தினராகவும், டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவன் ஐ.வி.மகாசேனன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது அழகேசன் மைந்தர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்வில் இசை விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.