நல்லூரில் செல்லப்பா சுவாமிகளின் குருபூசை

நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு வெள்ளிக்கிழமை (18.07.2025) காலை-09 மணியளவில் யாழ் நல்லூரில் அமைந்துள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

அபிஷேகம், திருமுறை, நற்சிந்தனை ஓதுதலைத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்.பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. கிருபாசக்தி கருணா கலந்து கொண்டு 'சித்தர் மகிமை' எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துவார்.