தெல்லிப்பழையில் இளையோர் சுகநலக் கண்காட்சியும் நடைபவனியும்

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, யாழ்.தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தாய்மார் கழகங்கள் இணைந்து நடாத்தும் இளையோர் சுகநலக் கண்காட்சியும் விழிப்புணர்வு நடைபவனியும் திங்கட்கிழமை (21.07.2025) நடைபெறவுள்ளது.

நாளை காலை-07.30 மணியளவில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலிருந்து போதைப் பொருள் பாவனை, வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வுக்காக விழிப்புணர்வுப் பேரணி ஆரம்பமாகவுள்ளது. போசாக்கு, பாடசாலை சுகாதாரம், தாய்- சேய் நலம், சுற்றுச்சூழல் சுகாதாரம், உளநல ஆன்மீக சுகாதாரம் ஆகிய தொனிப் பொருட்களில் நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இளையோர் சுகநலக் கண்காட்சியும் இடம்பெறும்.
   
இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாணச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி. வி.பி.எஸ்.டி.பத்திரண, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, குறித்த நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.