அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுத் திட்டத்திற்கு மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளை திங்கட்கிழமையுடன் (21.07.2025)  நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார் 30 ஆயிரம் மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாகவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த மேன்முறையீடுகள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டுக் குழுவினூடாக நாளைய தினம் மீளாய்வு செய்யப்படுமெனவும் நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.