பாடசாலை மாணவர்களுக்கு உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பினர் செய்த பேருதவி!

கிளிநொச்ச்சி 19 ஆவது கட்டை பல்லவராயன் கட்டு முழங்காவில் கிராமத்தைச் சேர்ந்த பொருளாதார நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஐவருக்கு உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பினரால் நேற்று முன்தினம் சனிக்கிழமை (19.07.2025) மாலை ஐந்து புதிய துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

புலம்பெயர் நண்பர்களின் நிதி உதவியுடன் மேற்படி புதிய துவிச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பின் தலைவர் ந.விஜயதரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு புதிய துவிச்சக்கரவண்டிகளைக் கையளித்தனர்.