ஞானச்சுடர் சஞ்சிகையின் ஆடி மாத வெளியீட்டு நிகழ்வு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஞானச்சுடர் சஞ்சிகையின் 331 ஆவது ஆடி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (25.07.2025) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறவுள்ளது.  

மேற்படி நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் செல்வி. தயாளினி குமாரசாமி மலரின் வெளியீட்டுரையையும், சைவப்புலவர் திருமதி.சசிலேகா ஜெயராஜன் மலரின் மதிப்பீட்டுரையையும் நிகழ்த்தவுள்ளனர்.