கந்தர்மடத்தில் சிறப்புப் பட்டிமன்றம்

ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றிய யாழ்.பிராந்திய மகளிர் அணியும், ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் மட்டக்களப்புப் பிராந்தியமும் இணைந்து நடாத்தும் சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (25.07.2025) யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள நித்திலம் கலையகத்தில் இடம்பெறவுள்ளது. 

இந் நிகழ்வில் சமூக முன்னேற்றத்தில் பெரிதும் பங்களிப்பது ஆண்களே....! பெண்களே....! எனும் தலைப்பில் த.இன்பராசாவை நடுவராகக் கொண்ட பட்டிமன்றம் நடைபெறும். இந் நிகழ்வில் அனைத்துக் கலைஞர்களையும், கலை ஆர்வலர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.