பொற்பதி அறிவாலயம் நடாத்தும் சரஸ்வதி முன்பள்ளியின் போசாக்குக் கண்காட்சி-2025 இன்று வெள்ளிக்கிழமை (25.07.2025) முற்பகல்-10 மணியளவில் கொக்குவில் பொற்பதி அறிவாலய மண்டபத்தில் பொற்பதி அறிவாலயத் தலைவர் சண் வாமதேவன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஜெபரட்ணம், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன், யாழ்.கொக்குவில் நாமகள் வித்தியாலய அதிபர் திருமதி.உமாவதி ரவிகரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்,.