நல்லூரில் சிறைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளை நினைவு கூர்ந்தும், சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டியும் யாழ்.நல்லூர் கிட்டுப் பூங்கா வளாகத்தில் குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் அணிதிரள்வுப் போராட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (25.07.2025) இடம்பெறவுள்ளது.