நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த முதலாவது தமிழரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 98 ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு நாளை சனிக்கிழமை (30.08.2024) மாலை-04 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெறும்.
மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் வி.விஸ்வலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை கலந்து கொண்டு " அதிகாரப் பரம்பல், அதிகாரப் பகிர்வு, பிராந்திய அபிவிருத்தி" எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றுவார். இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவரும், தமிழறிஞருமான மறவன்புலவு க.சச்சிதானந்தன் " தேசம்- தேசியம் " எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துவார்.இதேவேளை, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

