யாழ்.மயிலணி சைவமகா வித்தியாலயத்தில் தரம்-06 இல் கல்வி கற்கும் மாணவரான சு.பார்கவின் சமூக விஞ்ஞானப் போட்டியில் தரம்- 6 வகை- I பிரிவில் மாகாண மட்டத்தில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் தமிழ்மொழி மூல மாணவர்களுக்கான தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டி நாளை சனிக்கிழமை (30.08.2025) முற்பகல்-10 மணியளவில் யாழ்.சென் மேரிஸ் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள நிலையில் குறித்த போட்டியில் இம் மாணவன் பங்குபற்றவுள்ளார்.
இதேவேளை, பிரிவு-1 மாணவர்களுக்கான மாகாண மட்டக் கணித ஒலிம்பியாட் போட்டிப் பரீட்சையில் இதே மாணவன் இரண்டாமிடம் பெற்றுக் கடந்த யூன் மாதம் கொழும்பில் இடம்பெற்ற தேசியமட்டக் கணித ஒலிம்பியாட் போட்டிப் பரீட்சையில் பங்குபற்றிப் பாடசாலைச் சமூகத்திற்குப் பெருமை சேர்த்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

