சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக உரை

வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச்சந்நிதி ஆலய விசுவாவசு வருட மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டுச் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் தினம்தோறும் நடாத்தப்பட்டு வரும் சிறப்பு நிகழ்வுகள் வரிசையில் பெரு விழாவின் ஏழாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (29.08.2025) முற்பகல்-10 மணியளவில் ஆன்மீக உரை நிகழ்வு நடைபெறவுள்ளது. 

இந் நிகழ்வில் ஆசிரியை திருமதி.சுதர்சன் அமிர்தகலா கலந்து கொண்டு “அன்பும் அருளும்” எனும் தலைப்பில் ஆன்மீக உரை நிகழ்த்துவார்.