கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா நாளை வெள்ளிக்கிழமை (29.08.2025) காலை-08.10 மணி தொடக்கம் முற்பகல்-10.15 மணி வரையுள்ள கன்னி லக்ன சுபமுகூர்த்த வேளையில் இடம்பெறவுள்ளது.
மகா கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமாகியது. இன்று வியாழக்கிழமை (28.08.2025) காலை-09 மணி தொடக்கம் மாலை-04 மணி வரை அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தி வழிபட முடியும். மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிஷேகம் இடம்பெறும்.
இதேவேளை, மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயச் சூழலும், அதனை அண்டிய பகுதிகளும் வர்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

