சங்கானையில் இரத்ததான முகாம்

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் அறிவுறுத்தலுக்கு அமைவாகச் சங்கானைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்  நிகழ்வு நாளை திங்கட்கிழமை (11.08.2025) காலை-09 மணி முதல் சங்கானைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு உயிர் காக்கும் இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.