அர்ப்பணிப்பு மிக்க உயிரியல் ஆசான் குணசீலனுக்கு யாழ் விருது வழங்கிக் கெளரவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாநகர சபையின் சைவசமய விவகாரக் குழுவின் ஏற்பாட்டில் நல்லைக் குமரன் மலரின் 33 ஆவது இதழ் வெளியீட்டு விழாவும், யாழ் விருது வழங்கும் நிகழ்வும் கடந்த புதன்கிழமை (06.08.2025) காலை-09 மணி முதல் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. 

நிகழ்வில் முக்கிய அம்சமாகக் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுநிலை விரிவுரையாளரும், சிறந்த மாணவர்கள் பலரை உருவாக்கிய வடமராட்சி கரவெட்டி மண்ணைச் சேர்ந்த அர்ப்பணிப்பு மிக்க உயிரியல் ஆசானுமாகிய சின்னத்தம்பி குணசீலன் யாழ்.மாநகர சபையின் முதல்வர் மதிவதனியால் 2025 ஆம் ஆண்டுக்கான யாழ் விருது வழங்கிச் சிறப்பாகக் கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து பணப் பரிசில் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார். 





அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கல்வியியலாளர்கள் மற்றும் அவரது மாணவர்களால் குணசீலன் கெளரவிக்கப்பட்டார்.

இதேவேளை, 'குணசீலனுக்கு யாழ் விருது வழங்குவது நூறு வீதம் பொருத்தமானது' என இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா கருத்துத் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.