புலமைப் பரிசில் பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

2025 ஆண்டுக்கான தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை (10.08.2025) இடம்பெறவுள்ளது. நாடு முழுவதும் 2787 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சையை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

இம் முறை தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் மொத்தமாக 307,951 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

பரீட்சை காலை-09.30 மணியளவில் ஆரம்பமாகும். பரீட்சார்த்திகள் காலை-08.30 மணியளவில் பரீட்சை மத்திய நிலையங்களில் அமர வேண்டியது அவசியம். 

பரீட்சைக்குத் தேவையான எழுதுகருவிகள் தவிர்ந்து ஏனைய பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.