'ஏழாலை' எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றான ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்பாள் ஆலய விசுவாவசு வருட மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (27.07.2025) சிறப்புறவும், மிகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.
காலை-09 மணியளவில் வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து திரு நடனத்துடன் அம்பாளும் மற்றும் விநாயகப் பெருமான், வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானும் உள்வீதியில் எழுந்தருளி முற்பகல்-10.30 மணியளவில் முத் தெய்வங்களும் முத் தேர்களில் ஆரோகணித்தனர். அதனைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க முற்பகல்-11 மணியளவில் முத்தேர் பவனி ஆரம்பமானது.
முத்தேர் பவனியில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.