உரும்பிராயில் கிராமிய உழைப்பாளர் சங்க வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுத் தற்போது பூர்த்தியடைந்துள்ள பெண்களுக்கான சுயதொழில் உற்பத்தி நிலையத்திற்கான இரண்டு புதிய அரைக்கும் இயந்திரங்கள் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நான்கு லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கையளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கோப்பாய்ப் பிரதேச செயலகத்தில் வைத்துக் கிராமிய உழைப்பாளர் சங்க நிர்வாகத்திடம் குறித்த அரைக்கும் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரகுமார் மற்றும் கோப்பாய்ப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் 2025 ஆம் ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் உரும்பிராயில் பெண்களுக்கான சுயதொழில் உற்பத்தி நிலையத்திற்கான புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இக் கட்டடத்தின் திறப்பு விழா அடுத்த மாதம்-23 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.