நாட்டிற்கு வரும் வௌிநாட்டவர்களுக்காக விமான நிலையத்தில் தற்காலிக வாகனச் சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (03.08.2025) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் விசேட நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுத் தெரிவித்துள்ளது.
வௌிநாட்டவர்கள் இன்று முதல் வாகன அனுமதிப்பத்திரத்தை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
இதேவேளை, இதுவரை வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள வௌிநாட்டவர்கள் வேரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.