குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய விசுவாவசு வருட மஹோற்சவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (31.07.2025) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் நடைபெறும்.
எதிர்வரும்-04 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-07 மணியளவில் திருமஞ்சத் திருப் பவனியும், 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-09 மணியளவில் திருமுறைப் பாராயண விழாவும், 06 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல்-11.30 மணியளவில் வேட்டைத் திருவிழாவும், 07 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு-07 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்-10 மணியளவில் திருத்தேர் பவனியும், மறுநாள்-09 ஆம் திகதி சனிக்கிழமை காலை-09 மணியளவில் தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் இரவு-07.30 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.