தெல்லிப்பழையில் இரத்ததான முகாம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் திட்டத்திற்கு அமைவாகத் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (05.08.2025) காலை-09 மணி முதல் தெல்லிப்பழைப் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வழங்கி உதவுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.