நாடு முழுவதும் கடந்த பெப்ரவரி மாதம்-09 ஆம் திகதியன்று நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பகிரங்க விசாரணையொன்றை முன்னெடுக்கவுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (05.08.2025) காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மின்சாரத் துறையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதையும், மின்வெட்டுக்கான மூல காரணங்களை அடையாளம் காண்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.