அஸ்வெசும பயனாளிகள் தமது கொடுப்பனவுகளை நாளை வெள்ளிக்கிழமை (15.08.2025) முதல் தமது வங்கி கணக்குகளூடாகப் பெற்றுக் கொள்ள முடியுமென நலம்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
11,275,973,750.00 ரூபா பணம் 1,421,745 பயனாளி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும். நாளைய தினம் பயனாளிகளின் கணக்குகளுக்குப் பணம் வரவு வைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.