இந்தியாவிலிருந்து MV Express(Cordelia Cruises) எனும் பெயருடைய பிரமாண்டமான அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல் நாளை வெள்ளிக்கிழமை (15.08.2025) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறை துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார்.
பத்துத் தளங்களைக் கொண்ட மிகவும் பிரமாண்டமான குறித்த கப்பலானது இந்தியாவிலிருந்து சுமார் 1391 சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்டு அம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக நாளைய தினம் காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது. இக் கப்பலில் சுமார் 584 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.