வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழாவை முன்னிட்டு 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது மாபெரும் நீர்வளக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (15.08.2025) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகி இன்று நான்காவது நாளாக இடம்பெற்று வருகிறது.
நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும் தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று மாலை-06 மணி முதல் செம்முகம் ஆற்றுகைக் குழுவின் "தண்ணீரின் கதை" நாடக ஆற்றுகையும் அதனைத் தொடர்ந்து உரையாடலும் இடம்பெறும். அடுத்த நிகழ்வாக பொதுமக்களின் பங்கேற்புடனான வடக்கின் நீர்வள உரையாடல் வட்டத்தினரின் (Northern Water Dialog Forum) சிறப்பு நிகழ்வும் இடம்பெறும்.