இளவாலை சேந்தான்குளத்திலிருந்து கடலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை!

யாழ்ப்பாணம் இளவாலை சேந்தான்குளம் பகுதியிலிருந்து நேற்றுத் திங்கட்கிழமை (04.08.2025) கடற்தொழிலுக்குச் சென்ற இருவர் இதுவரை கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

40 மற்றும் 50 வயதான இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். மீனவர்களும், கடற்படையினரும் இணைந்து காணாமற் போனவர்களைத் தேடி வருகின்றனர்.