இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் 133,678 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளித்ததிலிருந்து வாகனப் பதிவுகள் அதிகரித்துள்ளதாகவும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவற்றில் அதிகபட்சமாக 100,451 மோட்டார்ச் சைக்கிள்களும், 20,535 கார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1293 முச்சக்கர வண்டிகளும், பொருட்கள், பயணிகளை ஏற்றிச் செல்லும் இரட்டைப் பயன்பாட்டுக்குரிய 1995 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.