யாழ்ப்பாணம் - நல்லூர் முருகனின் பெருந்திருவிழாவுக்கு வருவோருக்கு வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த WASPAR & Young Water Professionals முயற்சியில் நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக இந்தக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
எங்களின் பிரதேச நிலக்கட்டமைப்பு, வழுக்கியாறு, திட்ட மாதிரிகளின் கண்காட்சிகள், விஞ்ஞான விளக்கங்கள், ஆய்வு முடிவுகள், விளையாட்டுகள், புதிர்ப்போட்டிகள் மற்றும் சிறார்களுக்கான ஏராளமான பரிசுப் பொருட்களுடன் எங்கள் உயிர்நாடியான எங்கள் நிலத்தடி நீர்வளத்தை பாதுகாக்க ஒரு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை இக்கண்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளது.
நல்லூர் கந்தனைக் காணவரும் பக்தர்கள் இந்த கூட்டுமுயற்சியிலும் கலந்து கொண்டு நிலத்தடி நீர், வடக்கு மாகாணத்தின் நீர் உத்தரவாதம் சார்ந்த விடயங்களை அறிந்து எங்களது இன்றைய தலைமுறையினதும் எதிர்கால சந்ததியினதும் வாழ்வியலை நிலைபேறாக பாதுகாக்க கரம் கோர்த்துப் பயணிக்க அழைக்கிறார்கள் வடக்கின் நீர்வள பாதுகாவலர்கள்.
📍இடம்: “நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில்” (நல்லூர் அரசடி வீதி, பாரதியார் சிலை அருகில்)
🗓️காலம்: 15.08.2024- 24.08.2024( தினந்தோறும்)
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காது தொடர நிலத்தடி நீரை பாதுகாப்போம்!

