யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக முன்னெடுக்கப்படும் 'யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா- 2025 இன்று வெள்ளிக்கிழமை(15.08.2025) காலை-09 மணியளவில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் கண்காட்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரத்தியேக இடத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், மூத்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இன்று ஆரம்பமாகும் யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 17 ஆம் திகதி வரையான மூன்று தினங்கள் நடைபெறுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று தினங்களும் புத்தகக் கண்காட்சியைத் தாண்டிச் சிறப்பு அரங்க நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.