2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மறு மதிப்பீடு செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மறுமதிப்பீடு செய்யப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்ப்பவர்களும், முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்களும், இன்று முதல் ஓகஸ்ட் மாதம்-12 ஆம் திகதி நள்ளிரவு வரை இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.